பொது செய்தி

இந்தியா

மலர் கண்காட்சியை, வரும் குடியரசு தினத்தில் நடத்த அரசு முடிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மலர் கண்காட்சியை, வரும் குடியரசு தினத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை இயக்குனர் ராஜேந்திர குமார் கடாரியா கூறியதாவது:பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கை, பள்ளி, கல்லுாரிகள் திறந்துள்ளது. இரண்டு ஆண்டாக

பெங்களூரு : கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மலர் கண்காட்சியை, வரும் குடியரசு தினத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை இயக்குனர் ராஜேந்திர குமார் கடாரியா கூறியதாவது:பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கை, பள்ளி, கல்லுாரிகள் திறந்துள்ளது. இரண்டு ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த லால்பாக் மலர்க்கண்காட்சியை நடத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா குறைந்தாலும் இதை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மலர்க்கண்காட்சிக்கு வரும் குழந்தைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

வரும், 2021 டிசம்பர் 25 குடியரசு தினத்தையொட்டி, மலர்க்கண்காட்சி நடத்த அரசு அனுமதியளித்துள்ளதால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும்.இது தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்படும். எத்தனை நாட்கள், எந்தெந்த நாட்களில் நடத்த வேண்டும் என்பது குறித்து, முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X