தமிழ்நாடு

பாதிப்புதொடர் மழையால் நூற்றுக்கணக்கான மாடுகள் கோமாரி நோயால்

Added : நவ 15, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளார், காமாக்காபட்டி அதன் உட்கடை பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக மாடுகள் வளர்க்கின்றனர். தற்போது தொடர் மழையால் நுாற்றுக்கணக்கான மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. வாய்காணை, கால்காணை, மடிநோயால் மாடுகள் அவதிப்படுகின்றன. கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில மாடுகள் இறந்துள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளார், காமாக்காபட்டி அதன் உட்கடை பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக மாடுகள் வளர்க்கின்றனர். தற்போது தொடர் மழையால் நுாற்றுக்கணக்கான மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

வாய்காணை, கால்காணை, மடிநோயால் மாடுகள் அவதிப்படுகின்றன. கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில மாடுகள் இறந்துள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். தற்போது கெங்குவார்பட்டியில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

மருந்துகளுக்காக தினமும் ரூ.800 முதல் ரூ.ஆயிரம் வரை செலவு ஏற்படுவதால் விவசாயிகள் நாட்டு வைத்தியமாக விரல் மஞ்சள், வேப்ப இலை, முடக்கத்தான் இலையை அரைத்து மடிகளில் தடவுகின்றனர். தேனி மாவட்ட கால்நடை மருத்துவமனையிலிருந்து, சம்பந்தப்பட்ட கிராமங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி கால்நடை இறப்பை தடுக்க வேண்டும் என மாடு வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்

இதுபற்றி மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் கூறுகையில், ''பாதிப்பு குறித்து கால்நடைத்துறை இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். பாதிப்புள்ள பகுதிகளுக்கு இன்று டாக்டர் கணபதி மாறன் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்'' என்றார்.

தடுப்பூசி கிடைக்குமாமூன்று மாத கன்றுகுட்டி முதல் அனைத்து வயது மாடுகளுக்கும் ஆண்டிற்கு இருமுறை (மார்ச் மற்றும் ஆகஸ்டில்) கோமாரி தடுப்பூசி செலுத்த வேண்டும். மாவட்டத்தில் ஆகஸ்டில் செலுத்த வேண்டிய ஒரு லட்சம் தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் தான் மாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக தடுப்பூசி பெற்று கால்நடைத்துறை மூலம் மாடுகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X