பொது செய்தி

தமிழ்நாடு

வராகநதியில் ஆபத்தான குளியல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெரியகுளம் : வராக நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் சிலர் தடுப்பணையில் குளிக்கின்றனர்.நீர்ப்பிடிப்பில் பெய்யும் மழை நீர் வராக நதி வழியாக சோத்துப்பாறை அணைக்கு வருகிறது. அணை நீர் மட்டம் 126.28 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக கடந்து செல்லும் வராகநதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால்

பெரியகுளம் : வராக நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் சிலர் தடுப்பணையில் குளிக்கின்றனர்.

நீர்ப்பிடிப்பில் பெய்யும் மழை நீர் வராக நதி வழியாக சோத்துப்பாறை அணைக்கு வருகிறது. அணை நீர் மட்டம் 126.28 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக கடந்து செல்லும் வராகநதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் துணி துவைத்து சிலர் குளிக்கின்றனர். நான்கு ஆண்டுகளில் வராகநதி வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியானதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X