பொது செய்தி

தமிழ்நாடு

பழ மரங்களை காக்க யோசனை

Added : நவ 15, 2021
Share
Advertisement
நத்தம் : பருவமழை காலத்தில் மா, கொய்யா உட்பட பழ மரங்களை காப்பாற்ற நத்தம் தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லமுத்து கூறியிருப்பதாவது: நத்தம் தாலுகாவில் 7,080 எக்டேரில் மாமரங்களும், 246 எக்டேரில் கொய்யாவும் சாகுபடியாகிறது. தற்போது பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது இம்மரங்களை விவசாயிகள் கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். காற்று வீசும் எதிர் விசையில்

நத்தம் : பருவமழை காலத்தில் மா, கொய்யா உட்பட பழ மரங்களை காப்பாற்ற நத்தம் தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லமுத்து கூறியிருப்பதாவது: நத்தம் தாலுகாவில் 7,080 எக்டேரில் மாமரங்களும், 246 எக்டேரில் கொய்யாவும் சாகுபடியாகிறது. தற்போது பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது இம்மரங்களை விவசாயிகள் கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். காற்று வீசும் எதிர் விசையில் மரங்களுக்கு முட்டுக் கொடுத்து பயிர்களைக் காப்பாற்றலாம்.

அறுவடைக்கு தயாரான காய்களை உடனே அறுவடை செய்ய வேண்டும். நோய் தாக்காத வண்ணம் பூச்சிக்கொல்லி தெளிக்கலாம். காய்கறி பயிர்களில் நீர் தேங்காமல் வடிகால் அமைக்க வேண்டும். பூஞ்சை நோய் தாக்காமல் இருக்க 'மான்கோசப், காப்பர், மற்றும் ஆக்சி குளோரைடு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X