பொது செய்தி

இந்தியா

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பி.எம்.டி.சி. பஸ்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில் மின்சாரத்தால் இயங்கும் பஸ்களை பி.எம்.டி.சி., பயன்படுத்துகிறது. அடுத்த ஆறு மாதங்களில், 643 புதிய பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார் கூறியதாவது:பயணியர் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, இணைப்பு ஏற்படுத்த மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும்

பெங்களூரு : மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில் மின்சாரத்தால் இயங்கும் பஸ்களை பி.எம்.டி.சி., பயன்படுத்துகிறது.

அடுத்த ஆறு மாதங்களில், 643 புதிய பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார் கூறியதாவது:பயணியர் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, இணைப்பு ஏற்படுத்த மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும் நாட்களில் 643 பதிய பஸ்கள் வாங்க பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக ஜெ.பி.எம்., நிறுவனம் 90 பஸ்கள், அசோக் லே லேண்ட் நிறுவனம் 300 பஸ்களை சப்ளை செய்யும்.

பி.எம்.டி.சி., படிப்படியாக பழைய பஸ்களை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளது. பஸ்களின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.முதற்கட்டமாக 100 பஸ்கள் அகற்றப்படும். இத்தகைய பஸ்கள் ஏலம் விடப்படும். விற்பனையாகாமல் தேங்கும் பஸ்களின் உதிரி பாகங்கள், புதிய பஸ்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.தற்போது பி.எம்.டி.சி.,யில் 6,484 பஸ்கள் உள்ளன. 5,141 பஸ்கள் அன்றாடம் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X