பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு 25ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கிராமங்களில் பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உளுந்துார்பேட்டை தாலுகா

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு 25ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கிராமங்களில் பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உளுந்துார்பேட்டை தாலுகா பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி சண்முகநாதன் சட்ட விழிப்புணர்வு பிரசார மொபைல் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். வழக்கறிஞர்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.பிரசார வாகனத்தில் சென்ற வழக்கறிஞர்கள், கோர்ட் ஊழியர்கள் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.பாண்டூர், களமருதுார், அரளி, நெய்வணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X