பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி பெறாதோரின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
துமகூரு : பாவகடாவின் கனுமரசெரவு லே --- அவுட்டில், கொரோனா தடுப்பூசி பெறாதோரின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி பெறுவது சிறந்த வழி. ஆனால் பலரும் தடுப்பூசி பெற தயங்குகின்றனர். துமகூரு பாவகடாவின் கனுமரசெரவு லே -- அவுட்டில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி பெற மறுக்கின்றனர்.சுகாதார

துமகூரு : பாவகடாவின் கனுமரசெரவு லே --- அவுட்டில், கொரோனா தடுப்பூசி பெறாதோரின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி பெறுவது சிறந்த வழி. ஆனால் பலரும் தடுப்பூசி பெற தயங்குகின்றனர். துமகூரு பாவகடாவின் கனுமரசெரவு லே -- அவுட்டில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி பெற மறுக்கின்றனர்.சுகாதார ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. அதிகாரிகள் தடுப்பூசி போட வந்த போது கால அவகாசம் கோரினர்.

இந்த லே -- அவுட்டில் கூலித்தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.தடுப்பூசி பெற்றால் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். பணிக்கு விடுமுறை போட்டால் கூலிப்பணம் கிடைக்காது. குடும்பம் நடத்துவது, கஷ்டமாக இருக்கும்.இதனால் பலரும் தடுப்பூசி பெறவில்லை. இதையே காரணமாக வைத்து இப்பகுதியின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வினியோகம் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த குற்றச்சாட்டை, மறுத்துள்ள மின் அதிகாரிகள், 'டிபாசிட் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தோம். இதற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X