பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பணக்காரர்களுக்கு மருத்துவ சலுகை!தற்போதைய எம்.எல்.சி.,கள் அள்ளிக்கொண்ட மருத்துவ சலுகை பற்றி விபரங்கள் வெளியே கசிந்திருக்கு.சட்ட மேலவையில் 75 உறுப்பினர்களில் 40 பேர், மருத்துவ சலுகையாக 1.43 கோடி ரூபாய் பெற்றதாக தெரிய வந்திருக்கு.பதவியில் இருக்கும் எம்.எல்.சி.,கள், 2019ல் 34 லட்சத்து 11 ஆயிரத்து 733 ரூபாய்; 2020ல் 47 லட்சத்து 22 ஆயிரத்து 216 ரூபாய்; 2021ல் 61 லட்சத்து 97 ஆயிரத்து 62 ரூபாயும் அரசின்

பணக்காரர்களுக்கு மருத்துவ சலுகை!

தற்போதைய எம்.எல்.சி.,கள் அள்ளிக்கொண்ட மருத்துவ சலுகை பற்றி விபரங்கள் வெளியே கசிந்திருக்கு.சட்ட மேலவையில் 75 உறுப்பினர்களில் 40 பேர், மருத்துவ சலுகையாக 1.43 கோடி ரூபாய் பெற்றதாக தெரிய வந்திருக்கு.பதவியில் இருக்கும் எம்.எல்.சி.,கள், 2019ல் 34 லட்சத்து 11 ஆயிரத்து 733 ரூபாய்; 2020ல் 47 லட்சத்து 22 ஆயிரத்து 216 ரூபாய்; 2021ல் 61 லட்சத்து 97 ஆயிரத்து 62 ரூபாயும் அரசின் மருத்துவ சலுகை பெற்றுள்ளனர்.

இதில், சிலிகான் சிட்டியில் கோல்டு வியாபாரியான புல்லுக்கட்டுக்காரர் 2019- -- 20 ல் 11 லட்சத்து 64 ஆயிரத்து 416 ரூபாய் மருத்துவ சலுகையாக நிதி பெற்றிருக்கிறாராம்.கை கட்சியின் சிலிகான் சிட்டி, 'மாஜி' மேயராக இருந்தவரும் கூட 2020ல் 4.2 லட்சம் ரூபாய் மருத்துவ சலுகையை பெற்றிருக்கிறார்னு தகவல் வெளியே தெரிய வந்திருக்குது.இவங்க எல்லோருமே பணக்காரர்கள் தானாம்.மாற்றம் ஏற்பட போகுதாம்!டிசம்பர் 10க்கு பின், கர்நாடக மாநில அரசில் பெரிய மாற்றம் வரப்போகுதுன்னு டில்லி தகவல் கூறுகிறது.தற்போதைய அமைச்சரவையில் மந்திரி பதவி வேணாம்னு உதறி தள்ளிய, 'மாஜி' சி.எம்., டில்லி சென்று வந்ததிலிருந்து

அவரது ஆக் ஷனெல்லாம் 'வேற' மாதிரியா இருக்குதாம்.டில்லியில் இருந்து மாநில கேபிடல் சிட்டிக்கு வந்ததுமே, அவர், 'மாஜி' முதல்வர்களில் ஒருவரை, குமார கிருபா சாலையில் வெயிட் செய்து, அரைமணி நேரம் அரசியல் ஆலோசனை நடத்தி இருக்கிறார். முகத்தில் சோர்வு தெரிவதை மறைக்கலையாம்!மோசடியில் 2 பூக்கார தலைவர்கள்?'பிட் காயின்' ஊழலில் கை கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைத்த தகவல் படி, பூக்கார தலைவர்கள் ரெண்டு பேர் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கு.

அவர்கள் யார் என்பதை முதல்வரே வெளியே தெரிவிக்கட்டும்னு அவர் கூறியிருக்கிறாரு.'பிட் காயின்' முறைகேட்டில் குற்றவாளியிடம் இருந்து எவ்வளவு தொகை கை மாறியது என்பதை விசாரித்த அரசுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், சி.எம்., தயங்காமல் கூட்டு கொள்ளையர்களை தண்டிக்க கட்சியை பார்க்க வேணாம்னு வலியுறுத்தி இருக்கிறாரு.சொந்த கட்சிக்காரர்களே 'எமன்!'சாந்தி நகர் தொகுதி அசம்பிளிக்காரரின் வாரிசை எப்படியேனும் பாலிடிக்சில் பெரிய ஆளாக ஆக்கணும்னு அப்பாரு தயார் செய்தாரு.

இவருக்கு மாநில கைக்கார தலைவர் பக்க பலமா இருந்து வராரு. யூத் பிரிவோட தலைவராக்க நாள் குறித்து வெச்சிருக்காங்க.ஆனால் 'பிட் காயின்' விவகார நம்பர் ஒன் குற்றவாளியான 'ஹேக்கர்' உடன் சாந்தி நகர் தொகுதி வாரிசான, யூத் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக பிரச்னை பூதாகரமாக கிளம்பி இருக்கு.பூக்காரங்களோ, புல்லுக்கட்டு காரர்களோ சும்மா இருந்தாலும், கைக்கார தலைவர்களே பீல்டு அவுட் ஆக்க எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றுறாங்க. 'குற்றவாளி' என முத்திரை குத்துறாங்கன்னு, 'கை' வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X