பொது செய்தி

இந்தியா

அரசு பள்ளிகளில் மாணவர் வருகை குறைவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரில் அதிகரித்து வரும் குளிரால், அரசு பள்ளிகளில் மாணவர் வருகை குறைந்துள்ளது.பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, முழு நேரம் செயல்பட துவங்கியுள்ளன. இந்நிலையில் பெங்களூரில் சாரல் மழையுடன், அதிகரித்து கொண்டிருக்கும் குளிரால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர் தயங்குகின்றனர்.பருவநிலை மாற்றத்தால், பல தனியார் பள்ளிகள், டிசம்பர்

பெங்களூரு : பெங்களூரில் அதிகரித்து வரும் குளிரால், அரசு பள்ளிகளில் மாணவர் வருகை குறைந்துள்ளது.

பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, முழு நேரம் செயல்பட துவங்கியுள்ளன. இந்நிலையில் பெங்களூரில் சாரல் மழையுடன், அதிகரித்து கொண்டிருக்கும் குளிரால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர் தயங்குகின்றனர்.பருவநிலை மாற்றத்தால், பல தனியார் பள்ளிகள், டிசம்பர் மாதம் வரை, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்துள்ளன.

தற்போது குளிர் சூழலால், அரசு பள்ளிகளிலும், மாணவர்களின் வருகை பதிவு குறைந்துள்ளது. மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி விடுவர் என அச்சப்படுவது ஒரு பக்கமும், தொடர் மழையால் பள்ளிக்கு பெற்றோர் அழைத்து செல்ல முடியாமலும் இருப்பதால் மாணவர்கள் விடுப்பு எடுத்து வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது மழை குறைந்து மிதமான தட்பவெப்பமாக மாறி வருகிறது. வரும் வாரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி வளாகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X