பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் காய்கறிகளின் விலை உச்சம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பருவமழை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக, வரத்து குறைந்துள்ளதால், பெங்களூரில் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது.கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையின் தாக்கமாக, பெங்களூரில் காய்களின் விலை அதிகரித்து வருகிறது.பெங்களூரு சந்தைகளுக்கு கோலார், பெங்களூரு புறநகர், ராம்நகர், சிக்கபல்லாபூர், பல்லாரி

பெங்களூரு : பருவமழை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக, வரத்து குறைந்துள்ளதால், பெங்களூரில் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது.கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

மழையின் தாக்கமாக, பெங்களூரில் காய்களின் விலை அதிகரித்து வருகிறது.பெங்களூரு சந்தைகளுக்கு கோலார், பெங்களூரு புறநகர், ராம்நகர், சிக்கபல்லாபூர், பல்லாரி மற்றும் தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறி வரத்து உள்ளது.கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் அதிக மழையாக இருப்பதால் விளைநிலைங்களில் காய்களை சாகுபடி செய்வதற்கு பணியாளர்கள் இல்லாததும், தேவைக்கு அதிகமான மழை நீரால் விளைநிலத்தில் பயிர்கள் சேதமடைந்தும் உள்ளன.

இதனால் பெங்களூரின் முதன்மை சந்தைகளான மல்லேஸ்வரம், கே.ஆர்.,புரம், யஷ்வந்த்பூர், காந்தி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை அதிகரித்து விற்பனையாகிறது.இரண்டு நாட்களுக்கு முன், கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், கத்திரிக்காய் 30 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சந்தைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துள்ளது.காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:

விலை உயர்வை வியாபாரிகள் நிர்ணயிக்கவில்லை. மழையால் வரத்து குறைந்துள்ளதால் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் தற்போது தான், வழக்கமான சூழல் திரும்பியது. மீண்டும் மழையால் பாதிப்பு ஏற்படுகிறது. விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் வீணாகிவிட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X