கிரைம் செய்திகள்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : நவ 15, 2021
Share
பைக்கிலிருந்து விழுந்தவர் சாவுஅவலுார்பேட்டை: தேப்பிராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 60; விவசாயி. இவர், நேற்று முன்தினம் உறவினர் ராஜேந்திரனுடன் சேத்பட்டிற்கு பைக்கில் பின்னால் அமர்ந்து வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் இறங்கி ஏறியபோது நிலை தடுமாறி மணி கீழே விழுந்தார் இதில், படுகாயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

அவலுார்பேட்டை: தேப்பிராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 60; விவசாயி. இவர், நேற்று முன்தினம் உறவினர் ராஜேந்திரனுடன் சேத்பட்டிற்கு பைக்கில் பின்னால் அமர்ந்து வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் இறங்கி ஏறியபோது நிலை தடுமாறி மணி கீழே விழுந்தார்

இதில், படுகாயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பஸ் மோதி ஒருவர் பலிதிண்டிவனம்: திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் மோதி நடந்து சென்றவர் இறந்தார். 45 வயது மதிக்கத்தக்க அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.டிராக்டர் கவிழ்ந்து முதியவர் பலிகள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் சிங்காரம், 72; இவர் தனது விளை நிலத்தை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது பள்ளத்தில் சிக்கி, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிங்காரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மின்கம்பியை மிதித்தவர் சாவு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அடுத்த வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 69; விவசாயி. இவர் அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் இளையராஜா என்பவரது விளைநிலத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். கடந்த 13ம் தேதி மாலை 5:00 மணியளவில் நிலத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அவர், அதே பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் என்பவரது விளைநிலத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்

.பெண் மாயம்: போலீஸ் விசாரணைவிழுப்புரம்: பிடாகம் நத்தமேட்டைச் சேர்ந்தவர் அருள் மகள் தேவதர்ஷிணி, 21; எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X