பொது செய்தி

இந்தியா

மாணவர்களிடம், 85 சதவீதம் மட்டுமே கட்டணம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : கடந்த இரண்டு கல்வியாண்டுகளில், மாணவர்களிடம், 85 சதவீதம் மட்டுமே கட்டணம் பெற்றிருக்க வேண்டுமென, கர்நாடகா மாநில அரசு பள்ளி நிர்வாககங்களுக்கு அறுவுறுத்தியுள்ளது.கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் அதிகம் நடத்தப்பட்டன. இதனால், வழக்கமாக வாங்கப்படும் கட்டணத்தை விடவும் குறைவாக வசூலிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி

பெங்களூரு : கடந்த இரண்டு கல்வியாண்டுகளில், மாணவர்களிடம், 85 சதவீதம் மட்டுமே கட்டணம் பெற்றிருக்க வேண்டுமென, கர்நாடகா மாநில அரசு பள்ளி நிர்வாககங்களுக்கு அறுவுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் அதிகம் நடத்தப்பட்டன. இதனால், வழக்கமாக வாங்கப்படும் கட்டணத்தை விடவும் குறைவாக வசூலிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.பல பெற்றோர் பொருளாதார சூழலால் கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாலும் போனது. கட்டணம் செலுத்தாத குழந்தைகளுக்கு, ஆன்லைன் வகுப்புகளில் இடம் பெற பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.இதுகுறித்து தற்போது அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும், அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டு கல்வியாண்டிலும், பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தில், பெற்றோர், 85 சதவீதம் மட்டுமே செலுத்தலாம்.இரண்டு கல்வியாண்டுகளிலும் முழுமையான கட்டணம் பெறப்பட்டிருந்தால் அவற்றை நடப்பு 2021 - 22 கல்வியாண்டுக்கான கட்டணத்தில் பதிய வேண்டும்.பள்ளிகளில் கட்டணம் செலுத்தாமல் தாமதிக்கும் காரணத்தால், மாணவர்களை வகுப்புகளுக்கு வருவதை பள்ளி நிர்வாகத்தினர் தடை செய்ய கூடாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டணப் பிரச்னையால் பல மாணவர்கள் பள்ளியிலிருந்து இடை நின்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X