பொது செய்தி

இந்தியா

இன்றைய குழந்தைகளே நாளைய பிரஜைகள்; அவர்களே இந்நாட்டின் சொத்துகள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மைசூரு : ''இன்றைய குழந்தைகளே நாளைய பிரஜைகள்; அவர்களே இந்நாட்டின் சொத்துகள்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி, மைசூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:சிறந்த கல்வி, சுகாதாரம், உணவளிப்பது எங்களின் முதல் கடமை. களங்கமற்ற, அழகழகான குழந்தைகளுடன், காலம் கடத்துவதுடன், அவர்களுக்கு நல்ல

மைசூரு : ''இன்றைய குழந்தைகளே நாளைய பிரஜைகள்; அவர்களே இந்நாட்டின் சொத்துகள்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி, மைசூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:

சிறந்த கல்வி, சுகாதாரம், உணவளிப்பது எங்களின் முதல் கடமை. களங்கமற்ற, அழகழகான குழந்தைகளுடன், காலம் கடத்துவதுடன், அவர்களுக்கு நல்ல கலாச்சாரம், தேசப்பற்று, நம் நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களை பற்றி, பெற்றோர் விவரிக்க வேண்டும்.குழந்தைகள் இந்நாட்டின் அஸ்திவாரம். நாம் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொறுத்தே நாட்டின் எதிர்காலம் அமையும்.

இன்றைய அதிநவீன, போட்டி நிறைந்த உலகில், குழந்தைகளுக்கு படிப்புடன் திறமையை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதே குழந்தைகள் தினம் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம்.குழந்தைகள் தினமான இந்த சுப நாளில் அவர்களின் கனவை நனமாக்க வேண்டும். கொரோனா அவர்களை பற்றாமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X