பொது செய்தி

இந்தியா

பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை கிராம பஞ்சாயத்துகள் ஏற்படுத்த வேண்டும்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பொது கட்டடம் மற்றும் சொத்துகளை பழுது பார்ப்பதுடன், பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை கிராம பஞ்சாயத்துகள் ஏற்படுத்த வேண்டும்' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:நிடி ஆயோக் நிதியுதவியை பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்குவது, சிறுவர்,

பெங்களூரு : 'பொது கட்டடம் மற்றும் சொத்துகளை பழுது பார்ப்பதுடன், பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை கிராம பஞ்சாயத்துகள் ஏற்படுத்த வேண்டும்' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:நிடி ஆயோக் நிதியுதவியை பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்குவது, சிறுவர், சிறுமியர், மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவது, 'சானிடரி பேடு' விற்பனை இயந்திரங்கள் வழங்குவது, மதிய உணவு தயாரிக்க சமையலறை கட்ட பயன்படுத்த வேண்டும்.மின் இணைப்பு வசதி, வைபை வசதிகள், வகுப்பறைகளை பழுது பார்ப்பது, கதவுகள், ஜன்னலை பழுது பார்ப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு வசதி செய்ய வேண்டும்.

கிராம பஞ்சாயத்துகளுடன், பள்ளி பொறுப்பு கமிட்டியும் கைகோர்த்து, கிராமத்தின் கல்வி கமிட்டி ஒருங்கிணைந்து, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பிள்ளைகளின் அளவை, பூஜ்யத்துக்கு கொண்டு வர வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையை, 100 சதவீதமாக்க வேண்டும்.நிடி ஆயோக் நிதியுதவியை கிராம பஞ்சாயத்துகள் பயன்படுத்தி பஞ்சாயத்து கட்டடம், அரசு கட்டடம், சொத்துகளை பழுது பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X