பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்புக்கு...விவசாயிகள் கடும் அதிருப்தி

Added : நவ 15, 2021
Share
Advertisement
விவசாய மின் இணைப்புக்கு மின்வாரிய ஊழியர்கள் பணம் வசூலிப்பது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாய மின் மோட்டாருக்கு இணைப்பு கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்திருந்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு

விவசாய மின் இணைப்புக்கு மின்வாரிய ஊழியர்கள் பணம் வசூலிப்பது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாய மின் மோட்டாருக்கு இணைப்பு கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்திருந்தனர்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்திருந்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.அதனடிப்படையில் பொது பிரிவினருக்கு (சாதாரண வரிசை) 2012ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கும், 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கும், தாட்கோ வரிசை (எஸ்.சி., - எஸ்.டி..) 2020ம் ஆண்டு வரைக்கும் தட்கல் வரிசையில் தற்போது வரை பதிவு செய்தவர்களுக்கும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளிடம் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்த இடம் அவருடையதுதானா. கிணறு உள்ளதா, மின் இணைப்பு வழங்குவதற்கான மின் கம்பங்கள் உள்ளதா என்பது குறித்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் சிலர் விவசாயிகளிடம் உங்களுக்கு விவசாய மின் இணைப்பு வந்துள்ளது எனக் கூறி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர்.இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளிடம் மின் வாரிய ஊழியர்கள் பணம் வசூலித்து வருவது விவசாயிகளை மேலும் கவலை அடையச் செய்துள்ளதுடன், அதிருப்தியடைந் துள்ளனர்.எனவே மின் இணைப்புக்கு பணம் வசூலிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X