பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : இருளர், பழங்குடியினர் பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருளர், பழங்குடியினருக்கு பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 25 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர்

கள்ளக்குறிச்சி : இருளர், பழங்குடியினர் பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருளர், பழங்குடியினருக்கு பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 25 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற தலா 6,000 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பழங்குடியினர் சுய உதவிக்குழு மூலம் எல்.இ.டி., பல்ப் தயாரிப்பதற்கு 10 லட்சம் ரூபாய் நிதி, நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க அலகு ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் 5 அலகிற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இருளர், பழங்குடியினர் தங்களது புகைப்படம், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற விபரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.மேலும், விண்ணப்பதாரரின் தொலைபேசி எண் மற்றும் சரியான முகவரியை குறிப்பிட்டு திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், தாலுகா அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X