பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்..1

Added : நவ 15, 2021
Share
Advertisement
சீட் கேட்க ஆளில்லையோ?கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் மேலவை தேர்தலில் போட்டியிட பத்துப்பேர் 'சீட்' கேட்டு லாபி நடத்தி வராங்க.இதில் கோலார், பங்கார்பேட்டை, வேம்கல், முல்பாகலுன்னு கை காரங்க கடும் முயற்சியில் குதிச்சிருக்காங்க.அதேபோல புல்லுக்கட்டு கட்சியிலும் சிந்தாமணி, முல்பாகல், கோலார், சீனிவாசப்பூர் தாலுகாகாரர்களும் களத்தில் இருக்காங்க.ஆனால், எல்லா

சீட் கேட்க ஆளில்லையோ?கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் மேலவை தேர்தலில் போட்டியிட பத்துப்பேர் 'சீட்' கேட்டு லாபி நடத்தி வராங்க.இதில் கோலார், பங்கார்பேட்டை, வேம்கல், முல்பாகலுன்னு கை காரங்க கடும் முயற்சியில் குதிச்சிருக்காங்க.

அதேபோல புல்லுக்கட்டு கட்சியிலும் சிந்தாமணி, முல்பாகல், கோலார், சீனிவாசப்பூர் தாலுகாகாரர்களும் களத்தில் இருக்காங்க.ஆனால், எல்லா சக்தியும் எங்களிடம் இருப்பதாக பெருமை பேசுகிற கோல்டன் சிட்டியில் ஒருத்தரும் எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட சீட் கேட்க முன் வரலையே.தொகுதி அசம்பிளிக்காரர்,

நகராட்சி, ஐந்தாறு கிராம பஞ்சாயத்து கை வசம் இருந்தும் எம்.எல்.சி., சீட் கேட்க ஆளில்லையோ!எஸ்.பி., நியமனம் உண்டா?தங்கமான நகரின் போலீஸ் எஸ்.பி., மேடம், பணி இடம் மாற்றம் செய்யப்பட்டு ரெண்டு மாதம் ஆகிறது.கோலார் எஸ்.பி.,க்கு கூடுதல் சார்ஜ் வழங்கினாங்க. ஆனால் கோல்டன் சிட்டிக்கென காலாகாலமாக இருந்த எஸ்.பி.,

நியமிப்பாங்களா அல்லது கோலார் மாவட்ட எஸ்.பி., கண்ட்ரோலில் தொடருமா என சந்தேக கேள்வி நகருக்குள்ளே சுழலுது.289 பேர் இடம் மாற்ற பட்டியலில் இருந்தவங்க தப்பிச்சாங்க. எப்புடியோ ரிசர்வ் படையும் டிரான்ஸ்பர் ஆகல!குளத்தை முழுங்க பார்க்கும் கும்பல்!கோல்டன் சிட்டியின் நுழைனு வாயில்களில் ஒன்றாக உள்ள பெமல் ஆலமரம் பகுதியில் உள்ள சோழ மன்னாதி மன்னர் கட்டி வைத்த குளம் சீர்படுத்தப்படவில்லை.இது, குப்பை குவிந்த இடமாக மாறியுள்ளது.

இதை அழித்து சில சமூக விரோதிகள் ஆட்டைய போட பாக்குறாங்க. சட்டவிரோதமா வளைத்து போட கோவில் குளத்தை சுற்றி வளாகம் அமைத்து ஆக்ரமித்து நோட்டம் போட்டு வராங்க.சோழரின் வரலாறு கூறும் குளத்தை அரசு தான் காப்பாற்றனும்னு அப்பகுதி ஜனங்க பேசிக்கிறாங்க.வந்திடுமா தொழிற் பேட்டை?கோல்டன் சிட்டியில் சுரங்க நிறுவனத்தோட 3,500 ஏக்கர் தரிசு நிலத்தின் மீது தொழில் மந்திரி பார்வை பட்டிருக்கு.தொலை நோக்கு பார்வையில் சிட்டியை தொழிற்பேட்டையா மாற்றப்போறதா கூறியிருக்காரு. வருவதை வரவேற்க பூக்காரங்க மட்டுமல்ல.

கோல்டு சிட்டியே குதுாகலமா காத்திருக்காங்க.இப்புடிதான் 1994 ல் பேக்டரிகள் அமைக்க போறதா சொன்ன 'அண்ட புளுகு, ஆகாய புளுகு'காரரால், தொகுதியே ஏமாந்தாங்க.அதிலிருந்து ஆட்சி அதிகாரத்துக்கு வருகிற பல பேரு தொகுதியின் 'வீக்னசை' புரிஞ்சிக்கிட்டு தொழிற்சாலை அமைப்பதாக 'புரூடா' விடுவதை விட்டப்பாடில்லை; தொழிற்சாலைகளும் வந்தப் பாடில்லை.

தொகுதி அசம்பிளி மேடம் கூட 5,000 பேரு வேலை செய்கிற பெரிய பேக்டரியை நவம்பர் 1 முதல் திறப்பதாக சொன்னாங்க.சொன்ன சொல்லை மறந்துட்டாங்க. எதிர்ப்பார்ப்பில் இருக்கிற யூத்துகள் மறக்கலையே.தொழிற்பேட்டை ஏற்படுத்த போவதாக பல மந்திரிகள் சொன்னது போல தற்போதைய தொழிற்மந்திரியும் நாற்று நட்டிருக்காரு. அது பாராங்கல் மீது நட்டாரோ, வளமான மண்ணில் பதித்தாரோ காலம் தான் பதில் சொல்லும்.பத்தோடு பதினொன்னா காலம் கடந்திடுமோன்னு பலரு பேசிக்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X