பெங்களூரு : விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பட்டியல் தயார் செய்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுபடி, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், விதிமுறைகளை மீறியுள்ள கட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, நகர திட்டமிடல் குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.குழு அதிகாரிகள், நேரடியாக கட்டடங்களை பார்வையிட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் அடுக்குமாடிகளை கட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, இக்குழுவின் மூலம் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள 8,486 கட்டடங்களில், 5,200 கட்டடங்கள் விதிமுறை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாநகர அதிகாரிகள் கூறியதாவது:மண்டல அளவில் விதிமுறை மீறிய கட்டடங்கள் குறித்து ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விதிமுறை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து குழுவினர் ஆய்வு செய்கின்றனர். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கட்டடங்களின் மீது நீதிமன்ற அறிவுரைப்படி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE