பொது செய்தி

இந்தியா

வலுவான நாட்டை உருவாக்க திறமையான மத்திய, மாநில அரசுகள் தேவை.

Added : நவ 15, 2021
Share
Advertisement
''வலுவான நாட்டை உருவாக்க திறமையான மத்திய, மாநில அரசுகள் தேவை. பரஸ்பரம் ஒருங்கிணைப்புடன் பணியாற்றினால் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைகளுக்கு, தீர்வு காணலாம்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.தென் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று நடந்தது.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை


''வலுவான நாட்டை உருவாக்க திறமையான மத்திய, மாநில அரசுகள் தேவை. பரஸ்பரம் ஒருங்கிணைப்புடன் பணியாற்றினால் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைகளுக்கு, தீர்வு காணலாம்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.தென் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று நடந்தது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:தென் மாநிலங்கள் பரஸ்பரம் ஒன்றொக்கொன்று, தொடர்பிலிருப்பதால், நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். தென் மாநிலங்கள் சுதந்திரம் இல்லாமல், ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.நாட்டின் நலனுக்காக, ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் மட்டுமே, இந்தியா அபிவிருத்தியடையும். பிரதமரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு தத்துவம், நமது மூல மந்திரமாக இருக்க வேண்டும்.தண்ணீர் பங்கீடு ஒன்றாக பணியாற்றுவதன் மூலம், இவற்றை செயல்படுத்தும் பொறுப்பு நமக்குள்ளது.

தென் மாநிலங்களின் கூட்டுறவுத்துறை கூட்டங்கள், தண்ணீர் பங்கீடு, போக்குவரத்து தொடர்பு, ஆரோக்கியம், தொழில்களை ஒரு மனதாக முடிவெடுக்க நல்ல வாய்ப்பாகும்.தென் மாநிலங்கள் அனைத்து விஷயங்களிலும், சிறப்பாக செயல்படுவது பெருமையான விஷயம். மற்ற மாநிலங்களுடன் கர்நாடகா ஒருங்கிணைப்புடன் நடந்து கொள்கிறது.கோதாவரி, காவிரி உட்பட மற்ற நதிகளின் இணைப்பு திட்டம் தொடர்பாக, கர்நாடகா ஏற்கனவே தன் கருத்தை, தேசிய நீர் அபிவிருத்தி ஆணையத்திடம்தெரிவித்துள்ளது.காவிரி, கிருஷ்ணா, பெண்ணாறு நீர்ப்பாசனத்தில், கர்நாடகாவுக்கு தன் பங்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்.

நீர்ப்பாசன பகுதிகளை வைத்துள்ள, மாநிலங்களின் பங்கு முடிவு செய்யப்படாத நிலையில், தமிழகம் காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு சட்டத்தில் வாய்ப்பில்லை.இத்திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதியளிக்கக்கூடாது. நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி, கூடுதல் தண்ணீர் பயன்படுத்தும் திட்டங்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது.கிருஷ்ணா நீர்ப்பாசனத்தின், ஸ்ரீசைலம் அணையில் பெருமளவில் தண்ணீரை பயன்படுத்தி, பலமுரு ரங்காரெட்டி, நக்கலகுன்டியில் ஏற்ற நீர்ப்பாசன திட்டங்களை துவங்க, தெலுங்கானா அல்லது அபெக்ஸ் ஆணையத்துக்கு அதிகாரமில்லை.

கூடுதல் நீரை பயன்படுத்தும் தெலுங்கானா மாநிலத்தின் ராஜிவ் காந்தி சங்கம பன்டா பேரேஜ் கட்டுவதை கர்நாடகா எதிர்க்கிறது. இத்திட்டத்துக்கு அனுமதியளித்தால், கர்நாடகாவுக்கு தன் பங்கு தண்ணீர் கிடைக்காமல், போகும். இதுபற்றி இணை ஆய்வில் மாநிலம் கை கோர்க்க தயார்.ஆய்வு துங்கபத்ரா ஆற்றுக்கு குறுக்கே ஆந்திரா கட்டி வரும் குந்துவுலு திட்டத்தால், கர்நாடகாவில் மூழ்கவுள்ள கிராமங்கள், நிலப்பரப்புகள் குறித்து இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்ததை போன்று, தண்ணீர் பங்கீடு விபரங்கள், மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ள அனுமதி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

பகிர்ந்தளிக்கப்பட்ட தண்ணீரை தவிர கிருஷ்ணா நீர் தொடர்பாக எந்த திட்டங்களையும் செயல்படுத்த, ஆந்திரா, தெலுங்கானா மாநிங்களுக்கு அதிகாரம் இல்லை.கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களுக்கிடையே, பரஸ்பரம் போக்குவரத்து ஒப்பந்தத்துக்கு, தெலுங்கானா, புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களின் ஒப்புதலை எதிர்ப்பார்க்கிறோம்.மாநிலங்களின் உள்துறைகள், ஒருங்கிணைப்புடன் பல குற்றங்களை தடுப்பது அவசியம்.

எல்லைகளில் தொடர்புகளை பலப்படுத்த வேண்டும்.கர்நாடகா எரி பொருள் உற்பத்தியில், முன்னணியில் உள்ள மாநிலம். மத்திய அரசின் இலக்கை எட்டிய ஒரே மாநிலம் கர்நாடகா. மாநிலம் மற்றும் முதலீட்டாளர்களின் நலனை கருதி, மாநிலங்களுக்கிடையிலான விலைப்பட்டியலின் வித்தியாசத்தை, மத்திய அரசு நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X