தடுப்பூசி முகாம்; கலெக்டர் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்; கலெக்டர் ஆய்வு

Added : நவ 15, 2021
Share
கள்ளக்குறிச்சி : மாடூர் கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சராசரியாக நாளொன்றுக்கு 6,000 முதல் 6,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.நேற்று மாவட்டத்தில் 430 இடங்களில் 8வது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் நடந்த முகாமை

கள்ளக்குறிச்சி : மாடூர் கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சராசரியாக நாளொன்றுக்கு 6,000 முதல் 6,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டத்தில் 430 இடங்களில் 8வது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். நேற்று 43 ஆயிரத்து 827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.டி.ஆர்.ஓ. விஜய்பாபு, ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

சங்கராபுரம்சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், குமணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கிராமத்தில் 18 வயதிற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடாதவர்கள் பெயர் பட்டியல் தயார் செய்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது.மருத்துவ அலுவலர் சியாமளா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பால முருகன், கிராம சுகாதார செவிலியர் மீரா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X