சின்ன சின்னதாய்கல்வி உதவித்தொகை ஆலோசனை
சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கென அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தங்கவயல் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ரவிரெட்டி தலைமையில் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள குருபவனில் நேற்று நடந்தது.தங்கவயல் வட்டார கல்வி துறைக்கு உட்பட்ட பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ரவி ரெட்டி கூறுகையில், ''கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். அரசு வழங்கும் சலுகைகள் மாணவர்களை சென்றடைய வேண்டும். அதன் பொறுப்பை பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும்,'' என்றார்.
சாலை அகலப்படுத்தும் பணிமாலுார் ரயில்வே மேம்பாலம் முதல் பெங்களூரு சாலை பம்பு ஹவுஸ் வரை சாலை அகலப்படுத்தும் பணியை துவக்கியுள்ளனர். இச்சாலையில் 60க்கும் அதிகமான கட்டடங்கள் 2 அடி முதல் 3 அடி வரை இடிக்கப்படுமென கட்டடங்கள் மீது குறிப்புகள் எழுதினர். ஜனவரிக்குள் அகலப்படுத்தப்படுமென பொதுப் பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.பன்றிகள், தெருநாய் தொல்லைதங்கவயலில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, பன்றிகள், நடமாட்டமும் பல இடங்களில் காண முடிகிறது. சேறு, சக்தி மயமாக இருப்பதால் பன்றிகள் உருண்டு புரள வசதியாக மாறியுள்ளது. தெருநாய்கள், பன்றிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.குரு பெயர்ச்சி பூஜைகுருபெயர்ச்சி சிறப்பு பூஜை இன்று காலை 10:30 மணிக்கு ராபர்ட்சன் பேட்டை நான்காவது பிளாக்கில் உள்ள ஆதி சக்தி மாரியம்மன் கோவிலில் நடக்கிறது. அஷேகம், ஹோம பூஜைகளில், பக்தர்கள் திரளாக வந்து பங்கேற்க கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பஸ் வசதி இல்லைகொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் உள்ளது. பெரு நகரங்களில் பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கவயலுக்கும், பங்கார்பேட்டைக்கும் மாலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் பஸ் வசதியே இல்லை. சிட்டி சர்வீஸ் பஸ்களும் இயக்கப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகள் கவனிக்க வேண்டுமென பயணியர் வற்புறுத்தியுள்ளனர்.3 வீடுகள் இடிந்தனராபர்ட்சன்பேட்டை நான்காவது பிளாக் பகுதியில் உள்ள மூன்று வீடுகள் நேற்று இடிந்தது. அக்கம் பக்கத்திலிருந்தோர், இடிந்த வீட்டில் இருந்தோரை மீட்டனர். நகராட்சி ஆணையர் நவீன் சந்திரா உட்பட ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். உரிய நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE