பொது செய்தி

தமிழ்நாடு

சேதமான தளவானூர் அணைக்கட்டை; இன்று மீண்டும் தொடர முடிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, சேதமடைந்த அணைக்கட்டு கரையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதைத் தடுக்க, அணைக்கட்டை வெடி வைத்து தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.விழுப்புரம் அடுத்த தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கடந்த 2020ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.
 சேதமான தளவானூர் அணைக்கட்டை;   இன்று மீண்டும் தொடர முடிவு


விழுப்புரம் : விழுப்புரம் அருகே, சேதமடைந்த அணைக்கட்டு கரையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதைத் தடுக்க, அணைக்கட்டை வெடி வைத்து தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் அடுத்த தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கடந்த 2020ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது. இப்பணியை நாமக்கல் பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் எடுத்து செய்தது.

கடந்த 9ம் தேதி, தளவானுார் அணைக்கட்டில் உள்ள மணல் தடுப்பு சுவர் ஆற்று நீரில் கரைந்து, அடித்துச் சென்றது. இதனால், தளவானுாரில், விழுப்புரம் மார்க்கமுள்ள வலதுபுறம் அணைக்கட்டு முதல் ெஷட்டர் பகுதி முற்றிலுமாக சாய்ந்து சேதமானது. பொதுப்பணி துறை (நீர்வளம்) பிரிவு அதிகாரிகள், 10ம் தேதி, மணல் தடுப்பு கரைந்த பகுதிக்கு அருகே கருங்கற்கள் மற்றும் மணல் மூட்டைகளை பதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த பணிகள் நடந்து கொண்டிருந்தபோது 11ம் தேதி கரைப்பகுதி மேலும் சரிந்ததால், 50 மீட்டருக்கு ஆற்று நீர் கரையை உடைத்துக் கொண்டு அப்பகுதி விளை நிலங்களில் புகுந்து கரும்புகள், மரங்கள் அடித்துச் சென்றன. இந்த கரைப்பகுதி மேற்கொண்டு உடைவதைத் தடுப்பதற்காக, அணைக்கட்டு சேதமடைந்த பகுதியை வெடிவைத்து உடைத்து, நீரோட்டம் செல்லும் பாதையை நேராக திருப்பி விட அதிகாரிகள் முடிவு செய்தனர்

.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் செயற்பொறியாளர் ராஜேந்திரன் உட்பட பொறியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சேதமான அணைக்கட்டு பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, திருவக்கரை அடுத்த எறையூர் பகுதியில் உள்ள வெடிவைக்கும் ஊழியர்கள் 7 பேர் அங்கு வரவழைக்கப்பட்டனர். திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன குடோனில் இருந்து 100 ஜெலட்டின் குச்சிகள், 200 தோட்டாக்கள் கொண்ட வெடி மருந்துகள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.இதில், ஒரு ஜெலட்டின் குச்சிக்கு 3 தோட்டாக்கள் என முழுதுமாக சேதமடைந்த அணைக்கட்டு பகுதியில் உள்ள விரிசல்கள் மற்றும் இடைவெளி பகுதிகளில் வைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை, மாலை 5:15 மணிக்கு, கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, ஆர்.டி.ஓ, அரிதாஸ் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு, அருகே பள்ளி கட்டடம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பாதுகாப்பாக வெடி வைத்து தகர்க்க அறிவுறுத்தினர்.மாலை 5:50 மணிக்கு, ஜெலட்டின்கள் வெடிக்க செய்யப்பட்டது. ஆனால், அணைக்கட்டு சற்றும் அசையாமல் அதே சாய்ந்த நிலையிலே ஆற்றில் இருந்தது.

இதையடுத்து, சேதமடைந்த பகுதியில் எங்கு வெடி வைத்தால் கீழே விழும் என்பதை சரியாக கண்டறிந்து தகர்க்குமறு கலெக்டர் அறிவுறுத்தி விட்டுச் சென்றார். இன்று மீண்டும் வெடிவைத்து தகர்க்கும் பணி நடைபெற உள்ளது.உதவிய இளைஞர்கள்அணைக்கட்டை வெடி வைத்து தகர்க்கும் பணியில் 7 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மீன் பிடிக்க வந்த எனதிரிமங்கலத்தை சேர்ந்த 5 பேரை உதவிக்கு அதிகாரிகள் அழைத்தனர். அணைக்கட்டு பகுதியில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி மூலமே வெடி மருந்துகள் வைத்து தகர்க்கும் பணி நடந்தது. மேலும், தளவானுார் கிராம இளைஞர்கள் பலரும், இந்த பணிக்கு உதவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X