சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் இறந்து கிடந்த பசுமாடுகள் விழுப்புரம் அருகே பரபரப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏரியில் பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் சாலையில் வழுதரெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை 9:00 மணியளவில் 10க்கும் மேற்பட்ட பசுமாடுகள், 4க்கும் மேற்பட்ட கன்றுகளோடு இறந்து கிடந்தன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.இதனை அந்த வழியாகச் சென்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏரியில் பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் சாலையில் வழுதரெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை 9:00 மணியளவில் 10க்கும் மேற்பட்ட பசுமாடுகள், 4க்கும் மேற்பட்ட கன்றுகளோடு இறந்து கிடந்தன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து, போலீஸ் மற்றும் வழுதரெட்டி வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., கமலநாதன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரித்தார். அதில், நேற்று முன்தினம் வரை அப்பகுதியில் மாடுகள் இறந்து கிடந்ததாக தெரியவில்லை. வெளியில் இறந்த மாடுகளைக் கொண்டு வந்து இங்கே போட்டுச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X