பழைய தங்க காசுகள் இருப்பதாக மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழைய தங்க காசுகள் இருப்பதாக மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது

Added : நவ 15, 2021
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, பழைய தங்க காசு இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஸ்ரீநாத், 38; இவரது வீட்டிற்கு கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள், தங்களிடம் பழங்கால தங்க காசுகள் உள்ளது. கணிசமான

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, பழைய தங்க காசு இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஸ்ரீநாத், 38; இவரது வீட்டிற்கு கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள், தங்களிடம் பழங்கால தங்க காசுகள் உள்ளது. கணிசமான தொகையைக் கொடுத்தால் தருவதாக கூறி பேரம் பேசியுள்ளனர்

.சந்தேகமடைந்த ஸ்ரீநாத், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்ததும், பைக்கில் வந்த இருவரும் தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் குபேந்திரன், 27; என தெரியவந்தது. தப்பியோடியது பெருமாள் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.இதுகுறித்து, எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று குபேந்திரனை கைது செய்தனர். தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகின்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X