பொது செய்தி

இந்தியா

'சைகோவ் - டி' தடுப்பு மருந்து பெரியவர்களுக்கு மட்டுமே; மத்திய அரசு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுடில்லி : சைடஸ் கடிலா' நிறுவனத்தின் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'சைகோவ் - டி' தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த 'சைடஸ் கடிலா' நிறுவனம் 'சைகோவ் - டி' என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. 'பார்மாஜெட்' என்ற கருவி வாயிலாக இந்த


புதுடில்லி : சைடஸ் கடிலா' நிறுவனத்தின் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'சைகோவ் - டி' தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த 'சைடஸ் கடிலா' நிறுவனம் 'சைகோவ் - டி' என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. 'பார்மாஜெட்' என்ற கருவி வாயிலாக இந்த மருந்து செலுத்தப்படும். முதல் 'டோஸ்' செலுத்திக் கொண்ட பின் 28 நாட்கள் இடைவெளியில் மேலும் இரண்டு டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. மேலும் ஒரு கோடி டோஸ் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு 'ஆர்டர்' செய்துள்ளது.இந்நிலையில் 'சைகோவ் - டி தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்துவதில் அரசு அவசரம் காட்டாது' என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.


latest tamil news


இதையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள சைகோவ் - டி தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.குரங்கு பிடித்த கதைஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் 'பாரத் பயோடெக்' நிறுவனம் இணைந்து 'கோவாக்சின்'தடுப்பூசியை தயாரித்தது.

தடுப்பூசி தயாரிப்பில் சந்தித்த சவால்கள் போராட்டங்கள் சுவாரஸ்யங்கள் குறித்து ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்துக்கு 'கோயிங் வைரல்: மேக்கிங் ஆப் கோவாக்சின் - தி இன்சைட் ஸ்டோரி' என பெயரிடப்பட்டுள்ளது.அதில் தடுப்பூசி பரிசோதனைக்கு 20 குரங்குகளை பிடித்து வருவதில் சந்தித்த சவால்கள் குறித்து அவர் சுவாரஸ்யமாக விளக்கி உள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் நகரங்களில் குரங்குகள் கிடைக்காமல் வனப்பகுதிக்கு சென்று பிடித்து வந்ததை சுவைபட கூறியுள்ளார்.குரங்கு பிடித்த கதை!ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் 'பாரத் பயோடெக்' நிறுவனம் இணைந்து, 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரித்தது. தடுப்பூசி தயாரிப்பில் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், சுவாரஸ்யங்கள் குறித்து ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா புத்தம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்துக்கு 'கோயிங் வைரல்: மேக்கிங் ஆப் கோவாக்சின் - தி இன்சைட் ஸ்டோரி' என, பெயரிடப்பட்டுள்ளது.அதில், தடுப்பூசி பரிசோதனைக்கு 20 குரங்குகளை பிடித்து வருவதில் சந்தித்த சவால்கள் குறித்து அவர் சுவாரஸ்யமாக விளக்கி உள்ளார்.கொரோனா ஊரடங்கினால் நகரங்களில் குரங்குகள் கிடைக்காமல், வனப்பகுதிக்கு சென்று பிடித்து வந்ததை சுவைபட கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X