சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல் தொழிலாளி கைது: 2 பேருக்கு வலை

Added : நவ 15, 2021
Share
Advertisement
கடலுார் : விருத்தாசலத்தில் லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்திய சுமை துாக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி 2 மூட்டைகளை ஒருவர் கடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து,

கடலுார் : விருத்தாசலத்தில் லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்திய சுமை துாக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு அமைந்துள்ளது.

இங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி 2 மூட்டைகளை ஒருவர் கடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து, கிடங்கு மேலாளர் வெங்கடேசன், கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, வீடியோ பதிவு அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இதில், அரிசி மூட்டைகள் இறக்கப்பட்ட டி.என்.28-வி.0716 எண்ணுள்ள லாரி விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமானது தெரிந்தது. சம்பவத்தன்று இவரே லாரியை ஓட்டி வந்துள்ளார். இவரது தந்தை சுமை துாக்கும் தொழிலாளி செல்வம் என்பவருக்கும் அரிசி மூட்டை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

அரிசி மூட்டைகளை கடத்த பயன்படுத்திய டி.என்.91-எஸ்-8605 எண்ணுள்ள மொபட் அதே பகுதி வீரமணி என்பவருக்கு சொந்தமானது தெரிந்தது. இவர்கள் மூவரையும் போலீசார் தேடி வந்தனர்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ரேகா மதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார், காணாதுகண்டான் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அவ்வழியாக நடந்து வந்த செல்வத்தை, 50; கைது செய்து, லாரி, மொபட் மற்றும் 2 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X