ஆரோவில் அருகே கோவிலில் திருடிய புதுச்சேரி ஆசாமிகள் 4 பேர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
வானுார் : ஆரோவில் அருகே கோவிலில் நகை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை மொரட்டாண்டி அய்யனார் கோவில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் ஆறரை சவரன் நகை, 2 பித்தளை குத்து

வானுார் : ஆரோவில் அருகே கோவிலில் நகை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை மொரட்டாண்டி அய்யனார் கோவில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் ஆறரை சவரன் நகை, 2 பித்தளை குத்து விளக்குகள் இருந்தது.விசாரணையில், புதுச்சேரி ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் அந்தோணி, 22; உழவர்கரை மடத்து வீதியைச் சேர்ந்த யாகூப் மகன் சூசைராஜா, 32; என தெரியவந்தது.

மேலும், அவர்கள் வைத்திருந்த நகைகள், கடந்த மாதம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பூத்துறை சாலையில் உள்ள எல்லை காளியம்மன் கோவிலில் திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்களுடன், புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் மகன் ஜோதி, 34; ரங்கப்பிள்ளை வீதி பெரிய மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் வொயிட் விஜய், 21; ஆகியோரும் கோவில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஆறரை சவரன் நகைகள், பித்தளை குத்து விளக்குகள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X