குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற தண்டனை வழங்கினால் எல்லாம் சரியாகி விடும்...

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து, பள்ளி குழந்தைகளுக்கு நிகழும், பாலியல் அத்துமீறல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அத்துமீறல்களை தடுப்பதில் முழு அக்கறை காட்ட வேண்டும்.வேறு என்ன... குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு
தினகரன், வைகோ

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து, பள்ளி குழந்தைகளுக்கு நிகழும், பாலியல் அத்துமீறல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அத்துமீறல்களை தடுப்பதில் முழு அக்கறை காட்ட வேண்டும்.


வேறு என்ன... குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற தண்டனை வழங்கினால் எல்லாம் சரியாகி விடும்!



மக்கள் நீதி மய்ய துணை தலைவர் தங்கவேலு அறிக்கை: பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், மத்திய அரசு குறைத்து உள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசு இவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.


தமிழகத்தில் இப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, இவ்வாறு நடந்திருந்தால், மாநிலமே ஸ்தம்பிக்கும் வகையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பர். இது தான் அவர்களின் அரசியல்!



தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: நிலவேம்பு கஷாயம் பாரம்பரிய சித்த மருந்து. இதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. பருவ மழைக்காலம் முடியும் வரை, காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி குறையும் வரை, தொடர்ந்து நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணியை, தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.


உண்மை தான். அனைத்து தரப்பினருக்கும் நிலவேம்பு கஷாயம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். இது, இந்த சீதோஷ்ணத்திற்கு மிகவும் அவசியம்!



ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: திருவள்ளுவரை மதம் சார்ந்தவராக சித்தரித்து வருகின்றனர். திருவள்ளுவர், ராஜராஜ சோழன் ஆகியோர் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். உள்நோக்கத்தோடு, வரலாற்றை திருத்தும் முயற்சி நடந்து வருகிறது. அது கண்டனத்திற்குரியது.


latest tamil news




இப்போது ஆட்சியிலிருப்பவர்கள், சிலரை சமாதானப்படுத்த அவ்வாறு செய்தால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், அதை மாற்றுவர். கடைசியில் உண்மையான வரலாறு மறைந்தே போகும். இது தான் தமிழகத்தின் சாபக்கேடு!



பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: தி.மு.க., அரசு இதுவரை செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலானது. அதை நிரூபிக்கும் வகையில், 'நீட்' தேர்வில் பழங்குடியின மாணவர்கள், 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தி.மு.க.,வின் நீட் பற்றிய பிதட்டல்கள் போலி என, மாணவச் செல்வங்கள் நிரூபித்துள்ளனர்.


'நீட்' மட்டுமின்றி கல்வி தொடர்பான விவகாரங்களில், தி.மு.க.,வின் கருத்தை மாணவர்கள் கேட்பதில்லை; அவர்கள், தங்கள் வழி தனி வழி என சிறப்பாக செயல்படுகின்றனர்!



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள, வரும் 25ம் தேதி வரை அனுமதி அளித்து, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.


மாநிலத்தில் இன்னமும் மழை, வௌ்ளம் பல இடங்களில் வடியாத நிலையில், பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியமே!


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
15-நவ-202112:40:09 IST Report Abuse
சீனி தண்டனை என்பதை விட சமூக மாற்றம் வரவேண்டும், சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும், ஏழை பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்னிலை தான் உள்ளது. எங்கு பார்த்தாலும் ஆசிரியரை பொதுமக்கள் சிறை, கட்டிவைத்து அடி உதை, பெற்றோர் முற்றுகை, 17 வயது சிறுவனுடன் ஆசிரியரை ஓட்டம், ஆசிரியர் செக்ஸ் சில்மிசம் கைது, என்ற செய்தி தான் அடிக்ககடி பத்திரிக்கைகளில் வருகிறது,இது பள்ளிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. சில கயவர்கள் செய்தும் தவறு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் பாதிக்கிறது. கண்ணியம் மிக்க ஆசிரியர் பணிக்கு மட்டும் 50% இடங்களை தகுதி அடிப்படையில் நிரப்பினால் தான், கல்வித்துறையை காப்பாற்ற முடியும், கோட்டா என்று தரமற்ற ஆசிரியர்கள் பெருக்கிவிட்டனர், கல்வித்தரமும் கெட்டுவிட்டது. ஆல் பாஸ் என்று வந்த பிறகு, 8ம் வகுப்பு மாணவனுக்கு ஒரு முழு பக்கம் தமிழை எழுதப்படிக்க தெரிவதில்லை. தனியார் பள்ளிகள் 5000-10000ம் சம்பளத்துக்கு எப்படிப்பட்ட கயவர்கள் வேலையில் இருந்தாலும், நடத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே தமிழக ஆசிரியர் தேர்வில் பாஸ் ஆனால் தான் தனியார் பள்ளியிலும் வேலை என்று சட்டம் வரவேண்டும். அதே போல் ஆண் ஆசிரியர்கள் 18 வயதுக்கு குறைவான பெண் பிள்ளைகளுக்கு, குழுக்கள் தவிர தனிப்பட்ட மெசேஜ் அனுப்ப தடை விதிக்கவேண்டும், மாணவியரை தனி அறைக்கு வரச்சொல்வது, அங்கே வா, இங்கே வா, புத்தக எடுத்துவா, ஆடிட்டோரியம் வா, விளையாட்டு பொருட்கள் அறைக்கு வா என்று சொல்வது சட்டவிரோதம் என பள்ளியில் சேரும்போது ஆசிரியருக்கு அடிப்படை விதிகள் என்ற புத்தகத்தை கல்வித்துறை வெளியிட்டு, வருடாவருடம் சட்ட திட்டங்களை புதுப்பித்து மீண்டும் இந்த விதிகளை பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். இதை மீறுபவர்களை டிஸ்மிஸ் செய்து தண்டிக்கவேண்டும். மாணவிகள் சந்தேகங்களை, பள்ளி ஆசிரியர் குழுவுக்கு வாட்சப்பில் அனுப்புவது பாதுகாப்பானது. 30 ஆண்டுகளுக்கு முன்னே சில கயவர்கள் இருந்தார்கள், ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லவர்களாகதான் இருந்தனர். வருடம் ஒரு தனிப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன் தன்னார்வ மற்ற அரசு செலவில் குழு அனைத்து பள்ளிகளிலும் போய் மாணவ, மாணவியரிடம் போய் எது தவறு எது சரி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர் பாதுகாப்பு, குழந்தை உரிமை, சட்ட திட்டம்பற்றி அறிவுறுத்தவேண்டும், குறைவாக மதிப்பெண் எடுக்கும் அல்லது பள்ளிக்கு அதிகம் லீவு போடும் 50-100 மாணவர்களிடம் குறைகளை தனிப்பட்ட கவுன்சலிங் நடத்தி கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பவேணும். பள்ளிகளில் பல குற்றங்கள் நடந்தாலும், பெரும்பாலும் விளையாட்டு ஆசிரியர் என்ற பெயரில் தான் பெரும்பாலும் குற்றம் நடக்கிறது. அதற்க்காக எல்லோரும், நல்ல விளையாட்டு ஆசிரியர்களும் இருந்தனர், பலர் இளம் பெண்பிள்ளைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. எனவே விளையாட்டு ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் கண்காணிப்பு வளைத்துக்குள் வைத்துக்கொள்ளவேண்டும், தவறு நடந்தால் டிஸ்மிஸ் என்ற நிலை வரவேண்டும், ஏனெனில் தங்களுக்கு ஒத்துழைக்கும் மாணவர்களை மட்டும் தேர்வு செய்யும் பல விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளனர், இவர்கள் சில நேரம் சில்மிசங்களில் ஈடுபடுகின்றனர். இதற்க்கு பிரான்சு, அமெரிக்காகூட விதிவிலக்கல்ல. கல்வித்துறை என்பது ஒரு மாணவனில் எதிர்காலம், அதில் விளையாரும் யாராக இருந்தாலும், டிஸ்மிஸ் என்பதில் சட்டம் உறுதியாக இருந்தால் தான், மாணவ சமுதாயத்தை காப்பாற்ற முடியும், இல்லையெனில் இது மாதிரி தற்கொலைகளை யாரும் தடுக்கமுடியாது கயவர்களும் ஆசிரியர் பணியில் இருப்பார்கள். பெற்றவர்களும் பிள்ளைகளுடன் தொடர்ந்து குறைகளை கேட்டறியவேண்டும், அவசர உலகில் இதற்க்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. அதே போல் பல அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை பள்ளிகளில் புகுத்துகின்றனர், இது கண்டனத்துகுறியது, சமீபமாக திருப்பூரில் சர்ச்சை எழுந்தது, எனவே பள்ளிகள், அரசு அனுமதி கொடுக்கும் புத்தகம் தவிர யாரும் தனிப்பட்ட வகையில் பள்ளிக்கு புத்தகம் தருவதை தடை செய்ய வேண்டும். மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துவது சமுதாயம், அரசு, பெற்றோரின் கடமையாகும். எந்த குழந்தைக்கு தவறு நடந்தாலும் யார் வேண்டுமானலும் தட்டிக்கேட்கலாம், புகார் செய்யலாம், என்ற நிலை வரவேண்டும்.
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
15-நவ-202111:56:48 IST Report Abuse
anbu அப்படியே ஊழல் மற்றும் நில அபகரிப்பு, சொத்து குவிப்பு குற்றங்களுக்கும் அங்கே உள்ள தண்டனைகளை கோரலாம்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-நவ-202110:54:23 IST Report Abuse
sankaranarayanan குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற தண்டனை வழங்கினால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறும் தினகரனுக்கு வாழ்த்து. ஆனால் ஊரையே கொள்ளையடித்து, மக்களை ஏமாற்றி, ஊருக்கு ஒரு சொத்து வாங்கிப்போட்டு உலையில்போட்டு, ஜெயிலுக்கு சென்று வந்த சசி அம்மையார் குடும்ப உறவினர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்? கூண்டோடு கைலாசம் அனுப்பலாமா? அரபு நாட்டில் இது நடக்கும்.
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
15-நவ-202112:24:10 IST Report Abuse
gayathriசசிகலாவை விட அதிகமாக கொள்ளை அடித்தவர்கள் அமைதியாக இருக்கிறார்களே தமிழ்நாட்டில் (பொதுவான கருத்து இது) ஒரு வார்டு உறுப்பினர் கூட வெற்றி பெற்றவுடன் கோடீஸ்வரன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X