30.தலைமைப் பொறுப்புக்கு தயாரான நேதாஜி

Added : நவ 15, 2021
Share
Advertisement
சித்தரஞ்சன் தாஸ் மறைவிற்கு பிறகு தலைமை ஏற்று நடத்த தகுதியான நபர் சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் மனைவி வசந்திதேவிதான் என்று முடிவு செய்தார் நேதாஜி. அவரிடம் சென்று பேசவும் செய்தார். தாஸின் இடத்தை இட்டு நிரப்ப உங்களை விட சிறந்த நபர் கிடைக்க முடியாது. தயவு செய்து நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். வசந்திதேவி மறுத்தார். நான் எதற்காக இத்தனை பெரிய சுமையை
30.தலைமைப் பொறுப்புக்கு தயாரான நேதாஜி

சித்தரஞ்சன் தாஸ் மறைவிற்கு பிறகு தலைமை ஏற்று நடத்த தகுதியான நபர் சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் மனைவி வசந்திதேவிதான் என்று முடிவு செய்தார் நேதாஜி. அவரிடம் சென்று பேசவும் செய்தார். தாஸின் இடத்தை இட்டு நிரப்ப உங்களை விட சிறந்த நபர் கிடைக்க முடியாது. தயவு செய்து நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். வசந்திதேவி மறுத்தார். நான் எதற்காக இத்தனை பெரிய சுமையை என் தோளில் சுமக்க வேண்டும்? மன்னிக்கவும். எனக்கும் அரசியலுக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது என்றார்.

தொடர்ந்து வசந்திதேவியை விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருந்தார் நேதாஜி. வசந்திதேவி வழக்கம் போல் மறுத்துக் கொண்டு வந்தார். ஒரு முறை திடீரென்று நேதாஜியை அழைத்தார் வசந்திதேவி. பேசாமல் நீங்களே தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை நான் அறிவேன். அவர் விரும்புவதும் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.

உங்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், என்னை தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டாம் என்று சொன்னார். நேதாஜி ஏன் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்டார் வசந்திதேவி. நான் பல்வேறு விஷயங்களை என் மூளையில் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறேன் அதனால் வேண்டாம் என்றார். இதில் குழப்பம் எதுவும் இல்லை உடனடியாக தயாராகுங்கள் என்று சொன்னார் வசந்திதேவி.
எழுத்துருவாக்கம்:
ஆதலையூர் சூரியகுமார்,
மாநிலச் செயலாளர்,
தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X