பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மில் நிர்வாகத்தை கண்டித்து புளியம்பட்டி அருகே மறியல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, விண்ணப்பள்ளி அருகே பஞ்.,க்கு சொந்தமான மண் சாலை உள்ளது. அப்பகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று காலை அந்த சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி, 30 அடி அகலத்துக்கு மண் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆவேசமடைந்த மக்கள் நூற்றுக்கும்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, விண்ணப்பள்ளி அருகே பஞ்.,க்கு சொந்தமான மண் சாலை உள்ளது. அப்பகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று காலை அந்த சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி, 30 அடி அகலத்துக்கு மண் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆவேசமடைந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மாலை சத்தியமங்கலம் - கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'விண்ணப்பள்ளியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான, 40 அடி அகலமுள்ள மண் சாலை உள்ளது. எந்த அனுமதியும் இன்றி மண் சாலையில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, 500 அடி நீளம், 30 அடி அகலத்திற்கு, 3 அடி ஆழம் வரை தோண்டி மண்ணை வெட்டி எடுத்து மில் வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். மண் கடத்தல் நடந்துள்ளது குறித்து விண்ணப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். விண்ணப்பள்ளி வி.ஏ.ஓ., சுரேஷ்பாபு, பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X