பொது செய்தி

தமிழ்நாடு

கல்குவாரியை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அந்தியூர்: கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் அடுத்துள்ள கொமராயனூர், கூப்புக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இங்கு நினைத்த நேரங்களில் எல்லாம் வெடி வைக்கின்றனர். இதனால் பாறைகள் சிதறி, விவசாய நிலங்கள், வீடுகளின் மேல் கற்கள் விழுந்து சேதமடைகின்றன. ஆகவே அனுமதித்த நேரத்தில் மட்டும் குவாரியில், வெடி வைக்க வேண்டும் என பல

அந்தியூர்: கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் அடுத்துள்ள கொமராயனூர், கூப்புக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இங்கு நினைத்த நேரங்களில் எல்லாம் வெடி வைக்கின்றனர். இதனால் பாறைகள் சிதறி, விவசாய நிலங்கள், வீடுகளின் மேல் கற்கள் விழுந்து சேதமடைகின்றன. ஆகவே அனுமதித்த நேரத்தில் மட்டும் குவாரியில், வெடி வைக்க வேண்டும் என பல முறை இப்பகுதி மக்கள் தெரிவித்தும் பலனில்லை. இதை கண்டித்து நேற்று இப் பகுதியினர், 50க்கும் மேற்பட்டோர் சென்னம்பட்டி - கொளத்தூர் சாலையில், மசக்கவுண்டனூர் பிரிவு அருகே காலை, 10:50 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானி டி.எஸ்.பி., கார்த்திகேயன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நாளை தாசில்தார் நேரில் வந்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக கூறியதை, ஏற்றுக்கொண்ட பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X