பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., சார்பில் கண் சிகிச்சை முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஈரோடு: அ.தி.மு.க.,வின், 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாமரைப்பாளையம், வடக்கு புதுப்பாளையம், கோட்ட வலசு,

ஈரோடு: அ.தி.மு.க.,வின், 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாமரைப்பாளையம், வடக்கு புதுப்பாளையம், கோட்ட வலசு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் மக்கள் பங்கேற்பதற்காக, அ.தி.மு.க., சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி, யூனியன் துணைத் தலைவர் மயில்?சுப்பிரமணியம்?, முன்னாள் மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் பேட்டை சின்னு, கொடுமுடி யூனியன் கவுன்சிலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X