சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விஷம் கொடுத்து கொலை; தற்கொலைக்கு முயன்ற தாய்

Added : நவ 15, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, மூன்று வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தற்கொலைக்கு முயன்றார்.பவானிசாகர், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ரமேஷ், 32. இவர் மனைவி மாலினி, 29. இவர்களுக்கு மூன்று வயதில் தமிழினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக, ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். மாலினி தன் குழந்தையுடன் சகோதரி

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, மூன்று வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தற்கொலைக்கு முயன்றார்.


பவானிசாகர், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ரமேஷ், 32. இவர் மனைவி மாலினி, 29. இவர்களுக்கு மூன்று வயதில் தமிழினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக, ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். மாலினி தன் குழந்தையுடன் சகோதரி ரேணுகா வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருமண நாள் என்பதால், மாலினி தன் குழந்தை தமிழினியுடன் தன் கணவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார். பின்னர் குளிர்பானத்தில் சாணி பவுடர் கலக்கி தான் குடித்து விட்டு, மகள் தமிழினிக்கும் கொடுத்துள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு குழந்தை உயிரிழந்தது. தாய் மாலினி மீது பவானிசாகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X