பொது செய்தி

தமிழ்நாடு

32 லட்சம் கட்டுமான தொழிலாளருக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : நவ 15, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மண்டல மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலர் முனுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் ரவி பேசினார். அதில், கொரோனா பேரிடர், மழைக்காலத்தால் கட்டுமான பொருள், சிமென்ட் விலை உயர்வால், தொழிலாளர்களுக்கு வேலையின்றி வருமானம் இல்லை. அதனால், தமிழகத்தில் பதிவு பெற்ற, 32 லட்சம் கட்டுமான தொழிலாளருக்கு, உடனே, 5,000 ரூபாய்

சேலம்: சேலத்தில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மண்டல மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலர் முனுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் ரவி பேசினார். அதில், கொரோனா பேரிடர், மழைக்காலத்தால் கட்டுமான பொருள், சிமென்ட் விலை உயர்வால், தொழிலாளர்களுக்கு வேலையின்றி வருமானம் இல்லை. அதனால், தமிழகத்தில் பதிவு பெற்ற, 32 லட்சம் கட்டுமான தொழிலாளருக்கு, உடனே, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். வாரியத்தில், 4,000 கோடி நிதியிருப்பு உள்ளதால், முதல்வர் ஸ்டாலின் கருணை காட்ட வேண்டும். நலவாரிய பலன்களான விபத்து நிதி, இயற்கை மரண உதவி நிதி, மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு இறுதிச்சடங்கு நடக்கும் நாளில், தாசில்தார் மூலம் வழங்க வேண்டும். திருத்தத்தின்படி விபத்து மரண நிதி, 10 லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரண உதவி நிதி, 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சேலம் மாவட்ட தலைவர் வாசுதேவன், நாமக்கல் மாவட்ட செயலர் நந்தகுமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X