குப்பனூர் சாலையில் மீண்டும் நிலச்சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பனூர் சாலையில் மீண்டும் நிலச்சரிவு

Added : நவ 15, 2021
Share
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பாறை கற்கள் சரிந்து, சாலையில் விழுவது, மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல், மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதனால், குப்பனூர் சாலையில், பாறைகள் சரிந்து விழுந்தும், சில இடங்களில் பாறை கற்கள், மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை

ஏற்காடு: ஏற்காட்டில் சில நாளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பாறை கற்கள் சரிந்து, சாலையில் விழுவது, மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல், மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதனால், குப்பனூர் சாலையில், பாறைகள் சரிந்து விழுந்தும், சில இடங்களில் பாறை கற்கள், மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், பாறை கற்களை, பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தினர். அச்சாலையில், சில நாளுக்கு முன் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அதேநேரம், இந்த மண்சரிவால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை.


ஏற்காடுக்கு போகாதீர்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் கனமழையால் அனைத்து நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாகி, முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளில் குளிப்பது, நீச்சல் அடித்தல், 'செல்பி' எடுத்தல், நீர்நிலைகளை கடந்து செல்லுதல், விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். ஏற்காட்டில், 10 நாளாக பெய்து வரும் மழையால், ஆங்காங்கே மண்சரிவு உண்டாகி, மலைப்பாதையில் பாறைகள், கற்கள் உருண்டு விழுகின்றன. அதனால் போக்குவரத்து தடைபட்டு, வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. தற்போதைய சூழலால், மக்கள், சுற்றுலாப்பயணியர், ஏற்காடு செல்வதை தவிர்க்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X