பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (88)
Share
Advertisement
சென்னை: திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில், 'தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்,' எனவும், 'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திருப்பதியில் 29வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
Tamil, Official Language, MKStalin, TamilnaduCM, தமிழ் மொழி, ஆட்சி மொழி, முதல்வர், ஸ்டாலின், வலியுறுத்தல்

சென்னை: திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில், 'தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்,' எனவும், 'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் 29வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது. எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்.


latest tamil news



அதேபோல், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. அதேநேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும். இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த உரையினை பொன்முடி வாசித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
16-நவ-202109:37:42 IST Report Abuse
Ramu இந்திய அளவில் ஆட்சிமொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி. தமிழக அளவில் ஆட்சிமொழி ஆங்கிலம் மற்றும் தமிழ். இந்த செய்தி குழப்புகிறது... முதல்வர், தமிழை இந்தியஅளவில் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்துகிறாரா? இது நடந்தால் நல்லதே. அப்படியென்றால், ஹிந்தி ஏற்கப்படாத மாதிரி, இந்திய அளவில் தமிழ் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? தமிழ் படித்தால் வருமானம் வரும், என்கிற நிலை வந்தாலே இதற்கு வரவேற்பு கிடைக்கும்.
Rate this:
Cancel
Bairav Kumar - Chennai,இந்தியா
16-நவ-202106:47:45 IST Report Abuse
Bairav Kumar மழைவெள்ளத்தை தடுப்பது எப்படி என்ன பண்றதுனு தெரியாத முதல்வர். ஆய்வு பேரில் ஆதரவு தொலைக்காட்சியில் ஸிரோவை ஹீரோவா காண்பித்து மக்களை ஏமாற்றுவது, தமிழ் பிரிவினைவாத வெறி, திராவிட பொய் கூற்றை புத்தகம், கிறிஸ்துவம், முஸ்லீம் மதமாற்ற சிந்தனை மூலம் பிம்பம் கட்டமைப்பது, இது தவிர தமிழக பொருளியல், மக்களை உணர்வுபூரவமாகவும், அறிவார்ந்த மாநிலமாக ஆக்க எந்த பேச்சோ திட்டமோ ஸிரோவிடம் இல்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202104:52:28 IST Report Abuse
J.V. Iyer இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X