சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோளிங்கர் ஏரியில் வெள்ளத்தில் நீந்தியபடி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சோளிங்கர்: சோளிங்கர் ஏரியில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், அப்பகுதியில் உள்ள கால்வாயில் அதிகளவு தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அங்கு இறந்தவர்களின் பிணங்களை வெள்ளத்தில் நீந்தியபடி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் காலனியில், சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். இதன் அருகில், சோளிங்கர்
சோளிங்கர் ஏரியில் வெள்ளத்தில் நீந்தியபடி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்

சோளிங்கர்: சோளிங்கர் ஏரியில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், அப்பகுதியில் உள்ள கால்வாயில் அதிகளவு தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அங்கு இறந்தவர்களின் பிணங்களை வெள்ளத்தில் நீந்தியபடி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் காலனியில், சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். இதன் அருகில், சோளிங்கர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய் உள்ளது. தரைப்பாலம் இல்லாததால், கால்வாயில் நடந்து தான் மக்கள் சோளிங்கருக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சோளிங்கர் ஏரி நிரம்பி வழிந்தது. இதிலிருந்து வெளியேறிய உபரி நீர், கால்வாயை மூழ்கடித்து வெள்ளம் போல தண்ணீர் வந்ததால், மக்கள் சோளிங்கர் செல்ல முடியாமல் தவித்தனர்.


latest tamil news


இந்நிலையில், நேற்று (நவ.,14) அப்பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியும், இன்று (நவ.,15) 60 வயது முதியவரும் இறந்தனர். வேறு வழியின்றி பிணத்தை வெள்ளத்தில் நீந்தியபடி சோளிங்கர் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். இந்த அவலநிலையை போக்க இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Udumalipettai ,இந்தியா
17-நவ-202114:08:47 IST Report Abuse
Muthu ஓடி ஓடி மூச்சு முட்ட முட்டு கொடுக்க முயல்கிறாரு ....பாவம். ..புனை பெயர் காரர் .... ஒரு வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது... கொய்யாலேயே ... கொடுத்த காசுக்கு மேல கூவ படுகிறது .. இம்ம் இன்னும் ... ட்ரை பண்ணுங்க சார்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
15-நவ-202121:04:07 IST Report Abuse
Visu Iyer கல்லூரி பேராசிரியராக - பொருளாதார ஆலோசகராக - வங்கியில் கவர்னராக, - ரிசர்வ் வங்கியின் கவர்னராக - நிதித்துறை செயலாளராக - திட்ட கமிஷன் தலைவராக - பிரதமரின் ஆலோசகராக, - யுசிஜி தலைவராக - இந்தியாவின் நிதி அமைச்சராக - இந்தியாவின் பெருமை மிகு பிரதமராக - என படிப்படியாக பிரதமர் பதவிக்கு வந்தவர் மன்மோகன் சிங் அப்படி படிப்படியாக பிரதமர் பதவிக்கு வந்தால் தான் மக்களின் கஷ்டம் தெரியும் மக்கள் நலனில் அக்கறை வரும்.. மற்றதை புத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்
Rate this:
raja - Cotonou,பெனின்
16-நவ-202111:54:30 IST Report Abuse
rajaபடிப்படியா வந்து ஏர்ஸல் மேக்சிஸ், நேஷனல் ஹீராலாடு, நிலக்கரி ஊழல் உலக புகழ் 2G ஊழல் ன்னுபணியவ அதுக்கு உறுதுணையாக இருந்தவர்தான் மன்மோகன் ......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-நவ-202114:15:46 IST Report Abuse
Visu Iyerஅம்பது நாளில் கருப்பு பணத்த ஒழிப்பதாக சவால் விட்ட மோடி ஜி கொண்டு வந்த பண மதிப்பு இழப்பில் யாரும் மாட்டவில்லை.. அந்த வழக்கில் தவறு நடக்கவில்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி உள்ளது.. உங்கள் பதிவின் மூலம் மோடி ஜி கொண்டு வந்த பண மதிப்பு இழப்பை குறைவாக பேசி மோடி ஜி யை அவமான படுத்துவதாக மக்கள் உணர்கிறார்கள்.. எங்கள் அன்புக்குரிய பிரதமர் மோடி ஜி யை உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அமைதியாக இருங்கள்.. மோடி ஜி யை இப்படி ஜாடை மாடையாக குறை சொல்லி அசிங்க படுத்தாதீர்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட அவர் தான் நாட்டின் பிரதமர்.. முதலில் பிரதமரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் ராஜா.. நீங்களுமா இப்படி ஊழல் கருப்பு என விமர்சனம் செய்வது.. பிரதமரை உயர்வாக மதிக்கவிட்டாலும் பரவாயில்லை.. குறைவாக பேசாமல் இருங்கள்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
15-நவ-202119:33:43 IST Report Abuse
Visu Iyer மோடி ஜி யை நினைத்தால் பாவமா இருக்கு... சின்ன வயதில் கஷ்டம் டீ வியாபாரம் செய்து வளர்ந்தவர்.. இப்பவும் இவருக்கு கஷ்டம் தீரவில்லை.. இத்தனை வயதுக்கு பிறகு கூட அரசு தரும் சம்பளததுக்கு வேலை செய்கிறார். பிரதமர் கஷ்டம் இன்னும் தீரவில்லை என்று நினைத்தால் பாவமா தான் இருக்கு😜 பிரதமர் கஷ்டத்தை பார்க்கும் போது இதெல்லாம் ஒரு கஷ்டமா... தலைக்கு மேல் வெள்ளம் வந்தால் கூட தமிழன் அதுக்கு மேலே....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-நவ-202120:33:17 IST Report Abuse
Visu Iyerகஷ்டம் பிரதமருக்கு மட்டுமா.. எழுபது வயதுக்கு பிறகும் படத்தில் நடித்து பணம் சம்பாதித்து தான் வயத்தை கழுவனும் என்ற நிலையில் ரஜினி சார் இருக்கும் போது வேற என்ன சொல்ல.. ......
Rate this:
raja - Cotonou,பெனின்
16-நவ-202111:55:52 IST Report Abuse
rajaஅதுக்கு என்ன பன்றது திருட்டு திராவிடமும் கான்-கிராசு போல இவருக்கு உலக புகழ் ஊழல் எல்லாம் செய்ய தெரிய வில்லையே.. அதனாலதான் மோடி கஷ்டப்படறாருபோல...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-நவ-202114:17:42 IST Report Abuse
Visu Iyerமோடி கஷ்டப்படறாருபோல.../// அப்போ நாடு முன்னேறி வருகிறது என்று சொல்வதெல்லாம் பொய் என்று சொல்றீங்களா.. உங்களுக்கு மோடி ஜியை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருங்கள்.. பதிவுக்கு பதிவு மோடி ஜியை குறை சொல்வதே உங்களுக்கு வேலை... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மோடி ஜி தான் இந்தியாவின் பிரதமர் அவரை உயர்வாக மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.. குறைவாக பேசாமல் இருங்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X