பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பான இடத்தில் 40 குடும்பம் தங்க வைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடி, தேவூர், கொளத்தூரில், மழைநீரால் பாதிக்கப்பட்ட, 40 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.இடைப்பாடி தாலுகாவில், சரபங்கா ஆற்றின் குறுக்கே, 360 ஏக்கரில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தில் வெள்ளாளபுரம் ஏரி உள்ளது. தொடர் மழையால், அந்த ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது. இதனால், அதன் அருகில் உள்ள, 20க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்

இடைப்பாடி: இடைப்பாடி, தேவூர், கொளத்தூரில், மழைநீரால் பாதிக்கப்பட்ட, 40 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.


இடைப்பாடி தாலுகாவில், சரபங்கா ஆற்றின் குறுக்கே, 360 ஏக்கரில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தில் வெள்ளாளபுரம் ஏரி உள்ளது. தொடர் மழையால், அந்த ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது. இதனால், அதன் அருகில் உள்ள, 20க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வருவாய்த்துறையினர், அங்கிருந்த மக்களை, அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். அதேபோல், தேவூரில் சரபங்கா ஆற்றோரம் உள்ள, 10க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கொளத்தூர், லக்கம்பட்டி ஊராட்சி, ஊர்நத்தத்தில், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, அரசு தொகுப்பு வீடுகளில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மழையால் நேற்று சில வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அசம்பாவிதம் தவிர்க்க, பி.டி.ஓ., அசோக்ராஜ், பாதிக்கப்பட்ட, 10 குடும்பத்தை சேர்ந்த, 34 பேரை, அங்குள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்து, மதிய, இரவு உணவுக்கு ஏற்பாடு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X