சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலை: 4 பேருக்கு காப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
வாழப்பாடி: தொழிலாளியை கொன்று, நிர்வாண நிலையில் தண்டவாளம் அருகே புதரில் வீசிய, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அயோத்தியாப்பட்டணம், ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு, 45. இவர், கடந்த, 11ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, வாழப்பாடி ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை ஒட்டிய புதர் பகுதியில் நிர்வாண நிலையில் கிடந்தார். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர்.

வாழப்பாடி: தொழிலாளியை கொன்று, நிர்வாண நிலையில் தண்டவாளம் அருகே புதரில் வீசிய, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அயோத்தியாப்பட்டணம், ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு, 45. இவர், கடந்த, 11ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, வாழப்பாடி ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை ஒட்டிய புதர் பகுதியில் நிர்வாண நிலையில் கிடந்தார். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில், 3 தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை சோதனை செய்தனர். அதில், சந்தேகப்படும்படி நான்கு பேர், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வெளியே வருவது தெரிந்தது. விசாரணையில், அயோத்தியாப்பட்டணம், கே.எம்.நகரை சேர்ந்த தேவேந்திரன், 25, சதீஷ்குமார், 23, அனுப்பூர் தீபக்குமார், 22, மாசிநாயக்கன்பட்டி பிரகாஷ், 21, என தெரிந்தது. அவர்களை நேற்று பிடித்து விசாரித்ததில், குடிபோதையில் தகராறு ஏற்பட்டதில், குழந்தைவேலுவை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதனால், நான்கு பேரையும், காரிப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X