சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் - கார் மோதல்: தந்தை, மகள் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
இடைப்பாடி: மொபட் மீது கார் மோதியதில், தந்தை, மகள் உயிரிழந்தனர். இதனால், கார் ஓட்டி வந்தவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, பவானி ஊராட்சிக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணையன், 31. இவரது மனைவி அம்பிகா, 27. இவர்களது மகள் சுகன்யா, 3. இவர்கள் மூவரும், சொந்த வேலையாக சேலம் சென்றுவிட்டு, 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில், நேற்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை, 4:30 மணிக்கு வைகுந்தம் பஸ் ஸ்டாப்

இடைப்பாடி: மொபட் மீது கார் மோதியதில், தந்தை, மகள் உயிரிழந்தனர். இதனால், கார் ஓட்டி வந்தவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, பவானி ஊராட்சிக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணையன், 31. இவரது மனைவி அம்பிகா, 27. இவர்களது மகள் சுகன்யா, 3. இவர்கள் மூவரும், சொந்த வேலையாக சேலம் சென்றுவிட்டு, 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில், நேற்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை, 4:30 மணிக்கு வைகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, மொபட் பின்புறம், ஈரோடு, கோபி, உடையகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலவிக்னேஷ், 27, ஓட்டி வந்த, 'ஹோண்டா சிட்டி' கார் மோதியது. அதில், மொபட்டை ஓட்டிச்சென்ற கண்ணையன், அவரது மகள் சுகன்யா, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அம்பிகா படுகாயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சங்ககிரி போலீசார், பாலவிக்னேஷை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X