சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் வேலை தருவதாக பெண்ணிடம் ரூ.2.77 லட்சம் அபேஸ்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சேலம்: ஆன்லைனில் வேலை தருவதாக கூறி, பெண்ணிடம், 2.77 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.சேலம், மாசிநாயக்கன்பட்டி, லட்சுமி கார்டனை சேர்ந்த கார்த்திக் மனைவி நித்யா, 33. இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த, 2ல், 'ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளது' என தகவல் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசியபோது, 'வேலைக்கு டிபாசிட் செய்யும் தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும்' என மர்ம நபர்

சேலம்: ஆன்லைனில் வேலை தருவதாக கூறி, பெண்ணிடம், 2.77 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.


சேலம், மாசிநாயக்கன்பட்டி, லட்சுமி கார்டனை சேர்ந்த கார்த்திக் மனைவி நித்யா, 33. இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த, 2ல், 'ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளது' என தகவல் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசியபோது, 'வேலைக்கு டிபாசிட் செய்யும் தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும்' என மர்ம நபர் தெரிவித்தார். அதை நம்பிய நித்யா, வங்கி கணக்கில் இருந்து, 11ல், இரு லட்சத்து, 77 ஆயிரத்து, 950 ரூபாயை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தார். பணத்தை பெற்ற மர்ம நபர், வேலையோ, பணத்தையோ தரவில்லை. மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால், நித்யா புகார்படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X