பொது செய்தி

தமிழ்நாடு

அரூர் பெரியஏரிக்கு நீர் கொண்டு வர எம்.எல்.ஏ.,வுடன் களமிறங்கிய மக்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அரூர்: அரூரில், 160 ஏக்கர் பரப்பு கொண்ட பெரியஏரி நிரம்புவதால், அரூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும், சுற்று வட்டார விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஏரிக்கு தேவையான நீர், வாணியாறு அணையிலிருந்து வருகிறது. பருவமழையால் கடந்த மாதம், 16ல் வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில் நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. அணை

அரூர்: அரூரில், 160 ஏக்கர் பரப்பு கொண்ட பெரியஏரி நிரம்புவதால், அரூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும், சுற்று வட்டார விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஏரிக்கு தேவையான நீர், வாணியாறு அணையிலிருந்து வருகிறது. பருவமழையால் கடந்த மாதம், 16ல் வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில் நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. அணை பாதுகாப்பு கருதி, உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைகோட்டை உள்ளிட்ட, ஐந்து ஆயக்கட்டு ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து, தென்கரைகோட்டை ஏரியிலிருந்து கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணைக்கு இன்று காலை (நவ.,15) உபரிநீர் வரவுள்ளது. இந்த தடுப்பணையின் உயரம் குறைவாக உள்ளதால், அரூர், பெரியஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் உதவியுடன் ஏழு தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, நேற்று, 300க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை, காரை ஒட்டு தடுப்பணையில் அடுக்கி, அதன் உயரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்தாண்டும், இதேபோல், மணல் மூட்டைகளை அடுக்கி, அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X