இடுக்கி அணையில் நீர் திறப்பு| Dinamalar

இடுக்கி அணையில் நீர் திறப்பு

Added : நவ 15, 2021
Share
மூணாறு : இடுக்கி அணை 30 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நேற்று திறக்கப்பட்டது.கேரளாவில் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையில் அக்.,19ல் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. அப்போது அணை நீர்மட்டம் 398.86 அடியாக இருந்தது (மொத்த உயரம் 554). நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அக்., 22ல் இரண்டு மதகுகளும், எஞ்சிய மதகு அக்., 27ல் அடைக்கப்பட்டன.சில நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த
 இடுக்கி அணையில் நீர் திறப்பு

மூணாறு : இடுக்கி அணை 30 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நேற்று திறக்கப்பட்டது.
கேரளாவில் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையில் அக்.,19ல் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. அப்போது அணை நீர்மட்டம் 398.86 அடியாக இருந்தது (மொத்த உயரம் 554). நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அக்., 22ல் இரண்டு மதகுகளும், எஞ்சிய மதகு அக்., 27ல் அடைக்கப்பட்டன.சில நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.

நவ., 12ல் நீர்மட்டம் 398.32 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கையாக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டது. நேற்று மதியம் 2:00 மணிக்கு நீர்மட்டம் 398.94 அடியாக இருந்தபோது அணையில் ஒரு மதகு திறக்கப்பட்டு 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.முதன்முறை:அணை 1973ல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 1981, 1992, 2018 ஆகிய ஆண்டுகளில் திறக்கப்பட்டது.

2018ல் பெய்த கனமழையால் ஆகஸ்ட்டில் ஒரு மாதம் அணை திறக்கப்பட்டது. தற்போது முதன்முறையாக 30 நாளுக்குள் இருமுறை அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X