பூட்டாத கோவில் அலுவலகம்; விளக்கம் கேட்டு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டாத கோவில் அலுவலகம்; விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Added : நவ 15, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திலுள்ள தனி பாதுகாப்பு அறையில் சாமிக்கு சாத்தப்படும் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், உபயதாரர்கள் கொடுக்கும் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற மக்கள் கோவில் அலுவலகம் பூட்டாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திலுள்ள தனி பாதுகாப்பு அறையில் சாமிக்கு சாத்தப்படும் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், உபயதாரர்கள் கொடுக்கும் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற மக்கள் கோவில் அலுவலகம் பூட்டாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு கருதி மக்கள், அந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டதுடன், உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ள கோவில் அலுவலகத்தை பூட்டாமல் சென்ற பணியாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோவில் செயல்அலுவலர் சபரீஸ்வரிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவிட்டார். சம்பவத்தன்று கடைசியாக அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற டைப்பிஸ்ட் கவிதாவுக்கு விளக்கம் கேட்டு, கோவில் செயல் அலுவலர் சபரீஸ்வரி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும் விளக்கத்தை தொடர்ந்து, விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X