சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பையில் கிடந்த சிசு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பல்லடம் : பல்லடம் அருகே, குப்பையில் கிடந்த சிசு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வடுகபாளையம் --- சித்தம்பலம் ரோட்டில், நகராட்சி பொது கழிப்பிடம் அருகே, இறந்த நிலையில் சிசு கிடந்தது. பொதுமக்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் கூறுகையில், 'சிசு பிறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம். இறந்தே பிறந்ததா அல்லது


பல்லடம் : பல்லடம் அருகே, குப்பையில் கிடந்த சிசு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வடுகபாளையம் --- சித்தம்பலம் ரோட்டில், நகராட்சி பொது கழிப்பிடம் அருகே, இறந்த நிலையில் சிசு கிடந்தது. பொதுமக்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் கூறுகையில், 'சிசு பிறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம். இறந்தே பிறந்ததா அல்லது பிறந்தபின் கொலை செய்து குப்பையில் வீசினார்களா என தெரியவில்லை. உடல் சேதமடைந்ததால், பாலினம் தெரியவில்லை. சிசுவை வீசி சென்றவர்கள் யார் என்று விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X