சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி மற்றும் பாகலூரில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபராத்தப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 20. இவரும், குருபசப்படியை சேர்ந்த அவரது நண்பரான நவீன்குமார், 22, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர். சந்தோஷ் பைக்கை ஓட்டினார்.

ஓசூர்: சூளகிரி மற்றும் பாகலூரில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபராத்தப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 20. இவரும், குருபசப்படியை சேர்ந்த அவரது நண்பரான நவீன்குமார், 22, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர். சந்தோஷ் பைக்கை ஓட்டினார். சப்படியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த நவீன்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பேட்டரிங் வில்லியம் பிரசாத், 29. ஓசூர், என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று அதிகாலை வேலையை முடித்து விட்டு, பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் வீடு திரும்பினார். பாகலூர் சாலையில் அதிகாலை, 1:30 மணிக்கு அவ்வழியாக வந்த ஈச்சர் லாரி, அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X