பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 435 மி.மீ., மழை பதிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் விடியும் வரை பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில், 99 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாரூர், 88, ஊத்தங்கரை, 74, நெடுங்கல், 38.6, போச்சம்பள்ளி, 33.6, பெனுகொண்டாபுரம், 27.4, கிருஷ்ணகிரி, 21.8, தளி, 15,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் விடியும் வரை பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில், 99 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாரூர், 88, ஊத்தங்கரை, 74, நெடுங்கல், 38.6, போச்சம்பள்ளி, 33.6, பெனுகொண்டாபுரம், 27.4, கிருஷ்ணகிரி, 21.8, தளி, 15, ஓசூர், 14, அஞ்செட்டி, 9.6, சூளகிரி, 7, ராயக்கோட்டை, 7, என மொத்தம், 435 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதன் சராசரி, 36.25 மி.மீட்டராகும். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, 1,323 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,005 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு, 177 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 957 கன அடி என மொத்தம், 1,134 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X