பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி உடைப்பால் தண்ணீர் புகுந்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர் கனமழைக்கு, என்.தட்டக்கல் ஏரி நிரம்பி கரை உடைந்தது. வெளியேறிய நீர் விளைநிலங்கள் வழியாக, பாளேகுளி - சந்தூர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் கலந்ததால், வாய்க்கால் கல்வெட்டு சேதமானது. நேற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாய்க்கால் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். உடைந்த

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர் கனமழைக்கு, என்.தட்டக்கல் ஏரி நிரம்பி கரை உடைந்தது. வெளியேறிய நீர் விளைநிலங்கள் வழியாக, பாளேகுளி - சந்தூர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் கலந்ததால், வாய்க்கால் கல்வெட்டு சேதமானது. நேற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாய்க்கால் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். உடைந்த என்.தட்டக்கல் ஏரிக்கரையை சீரமைக்கும் பணியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர். இதேபோல், கயம் ஏரி நிரம்பி உடைந்ததால், மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்தனர். இடதுபுற வாய்க்கால் வழியாக, கம்புகாலப்பட்டிக்கு ஏரிக்கு தண்ணீர் சென்றது. நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு இந்த ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். குடியிருப்பு மற்றும் வயல்களில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் ஆய்வு செய்தனர். வாடமங்கலம் பஞ்., ஏரி முழு கொள்ளளவு எட்டிய நிலையில், உபரிநீர் ஜடையன் கொட்டாய் மற்றும் கரியன் கொட்டாய் குடியிருப்பு மற்றும் வயல்களில் புகுந்துள்ள நிலையில், நீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X