பொது செய்தி

தமிழ்நாடு

கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை: காட்டாற்றில் கரைபுரண்டு ஓடிய நீர்

Added : நவ 15, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் காட்டாற்றில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. தடுப்பணைகள் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கேர்மாளம், கோட்டமாளம், பசுவனாபுரம் மற்றும் மாக்கம்பாளையம் வனப்

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் காட்டாற்றில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. தடுப்பணைகள் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கேர்மாளம், கோட்டமாளம், பசுவனாபுரம் மற்றும் மாக்கம்பாளையம் வனப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஓடைகள், காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாக்கம்பாளையம் அருகே, காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால், கோம்பையூர் கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக கடம்பூர் சுற்றுவட்டார மலை கிராமங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மலைகிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X