பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலங்களில் யானைகள் முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஓசூர்: அந்தேவனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில், 10க்கும் ?மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மரக்கட்டா காப்புக்காட்டிலிருந்து நேற்று அதிகாலை வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள், அந்தேவனப்பள்ளி அருகே பெரிய ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வேட்டை தடுப்பு

ஓசூர்: அந்தேவனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில், 10க்கும் ?மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மரக்கட்டா காப்புக்காட்டிலிருந்து நேற்று அதிகாலை வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள், அந்தேவனப்பள்ளி அருகே பெரிய ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், யானைகளை பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு இடம் பெயர்ந்த யானைகள், பயிர்களை நாசம் செய்தன. பகல் நேரம் நெருங்கியதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, யானைகளை விரட்டும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர். மேலும், அந்தேவனப்பள்ளி, கங்கதேவனப்பள்ளி, முனுகனப்பள்ளி, தொட்டூர் சுற்று வட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரித்தனர். நேற்றிரவு மீண்டும், யானைகளை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X